கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது
அருள்மிகு கம்பம் கௌமாரியம்மன் சித்திரை திருவிழா இன்று ஏப்ரல் 16 புதன்கிழமை தொடங்கியது. அதை முன்னிட்டு கம்பம் கம்பராயப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இருந்து அம்மன் புறப்பாடு நடைபெற்று கம்பம் கௌமாரியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.