தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக பூமி தினம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி சார்பில் பூமி தினத்தை (22.04.2025) முன்னிட்டு கோகிலாபுரம் குறுங்காட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்வுக்கு கம்பம் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ. பஞ்சு ராஜா தலைமை தாங்கினார். ஆலிலை குடும்பத்தார் மணிமாறன், நாகேந்திரன், நிருபன், சுதர்சனா, வாணி, சத்யா, மற்றும் கல்லூரி மாணவிகள் இப்சிதா மகந்தா, ஜெயஸ்ரீ, காஞ்சனா, கரணிப் பிரியா, கனிஷ்கா, காவியா ஸ்ரீ, கீர்த்தி, நல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.