CRICKET UPDATE

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி 2024
கம்பம் கர்பானா மைதானத்தில் நடைபெற்றது. கம்பம் கிரிக்கெட் கிளப் சார்பில் கடந்த மூன்று மாதங்களாக LEAGUE முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இதில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. அதில் இறுதிப் போட்டியில் கோட்டூர் ராஜா கிரிக்கெட் கிளப் அணியினரும், குமுளி எலகன்ஸ் அணியினருக்கு இடையே நடைபெற்றது. குமுளி எலக்கன்ஸ் அணியினர் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர். இப்போட்டிக்கு கம்பம் கிரிக்கெட் கிளப் அணியின் பழனியாண்டி தலைமை தாங்கினார். முன்னிலை , கூடலூர் அழகு ஆர்மி கோச்சிங் சென்டர் திரு அழகேசன். திரு ராஜா தலைமையாசிரியர், திரு முத்துவேல் கிரிக்கெட் வீரர். எஸ் நவீன் சக்தி பாஜக ஊடகப்பிரிவு. திரு அரசு ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும், பரிசு கோப்பைகளும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
முதல் பரிசு வழங்கியவர் திரு.S நவீன் சக்தி தேனீ மாவட்ட ஊடகப்பிரிவு,
இரண்டாம் பரிசு வழங்கியவர் திரு. ஜே.சுல்தான் இப்ராஹிம் – வசந்தம் ஆப்டிக்கல்ஸ்,
மூன்றாம் பரிசு வழங்கியவர் கம்பம் கிரிக்கெட் கிளப் முன்னாள் வீரர்கள் இணைந்து.
நான்காம் பரிசு திரு ராஜா தலைமை ஆசிரியர் அவர்கள்.
மேலும் இப்போட்டிக்கு சிறப்பு பரிசுகள் ZOOT CYCLES கம்பம் , கூடலூர் ஆர்மி கோச்சிங் செண்டர் உரிமையாளர் திரு அழகேசன்.திரு. முத்துவேல் முன்னாள் கம்பம் அணி வீரர். 5K CAR CARE கம்பம். திரு. அரசு. கம்பம்.
தொடர் நாயகன் விருது போடி பென்னிகுக் அணியைச் சேர்ந்த திரு.நாச்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை எலகன்ஸ் அணியின் ராஜத் ராஜேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கம்பம் லைக் ஸ்போர்ட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கி வீரர்களை ஊக்கப்படுத்தினர்.
போட்டியின் ஏற்பாடுகள் அனைத்தும் கம்பம் கிரிக்கெட் கிளப் கேப்டன் திரு. செந்தில்நாதன் அவர்கள் தலைமையிலான வீரர்கள் செய்திருந்தார்.
இப் போட்டியை காண ஏராளமான விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.